பொது செய்தி

தமிழ்நாடு

பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள்

Added : ஜன 07, 2020
Advertisement

பெரம்பலுார் மாவட்டம், புதுநடுவலுார் கிராம பஞ்சாயத்து தலைவராக, நீலராஜ் என்பவரின் மனைவி ஜெயந்தி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருடன், ஒன்பது வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களது பதவியேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. பதவி பிரமாணம் எடுத்து கொண்ட ஜெயந்தி, அதே விழா மேடையில், பொதுமக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த விழாவில், ஊராட்சி தலைவர் ஜெயந்தி, சொந்த செலவில், தையல் மிஷின், சலவை பெட்டி, மாற்றுத் திறனாளிக்கான ஸ்கூட்டர் உட்பட, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X