பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுக்கு பின் 2019ல் அதிக மழை

Added : ஜன 07, 2020
Advertisement

20 ஆண்டுக்கு பின் 2019ல் அதிக மழைஇந்திய வானிலை ஆய்வு மையத்தின், தட்பவெப்ப நிலை ஆராய்ச்சி மற்றும் சேவை துறை சார்பில்,வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடந்த, 1901 முதல் உள்ள கணக்கின்படி, 2019ம் ஆண்டு, ஏழாவது வெப்ப ஆண்டாக இருந்தது; ஆனாலும், 2016ல், நிலவிய வெப்பத்தை விட குறைவாகவே இருந்தது. ஆண்டு சராசரி மழை, தேசிய அளவில் இயல்பான அளவில், 109 சதவீதமாக இருந்தது.

1998க்கு பின், 20 ஆண்டுகள் கழித்து, 2019ல், அதிக மழை பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான, தென்மேற்கு பருவ மழை காலத்தில், நாடு முழுவதுமான சராசரி மழை, 110 சதவீதமாக இருந்தது. வடகிழக்கு பருவமழை, 109 சதவீதமாக பதிவானது. தென்மேற்கு பருவமழை காலத்தில், நாட்டின் மத்திய பகுதி, 129; தென் மாநிலங்களுக்கு, 116 சதவீதம்; வடகிழக்கு மாநிலங்கள், 98 மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு, 88 சதவீதம் மழை கிடைத்துள்ளது. இந்திய கடற்பகுதியில், 2019ல், எட்டு புயல்கள் உருவாகின. அரபிக்கடலில், ஐந்து புயல்கள்; மற்றவை, வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலிலும் உருவாகின.

1902ம் ஆண்டுக்கு பின், அரபிக்கடலில், இந்த ஆண்டுதான் அதிகமான புயல்கள் உருவாகின. கடந்த ஆண்டில், நாடு முழுவதும், வெள்ளம், புயல், பனி புயல், பனி பொழிவு, இடி, மின்னல் மழை, புழுதி புயல் உள்ளிட்ட அனைத்து வகை, தட்பவெப்ப நிலை மாற்றங்களும் ஏற்பட்டன. இதில் அதிகபட்சமாக, பீஹாரில் மட்டும், 650 பேர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளத்துக்கு, நாடு முழுவதும், 850 பேர் பலியாகினர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X