கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினி விடுதலை: மத்திய அரசு நிராகரிப்பு

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்ய கோரிய மனுவை, மத்திய அரசு நிராகரித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ராஜிவ் கொலை வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர் நளினி; வேலுார் மகளிர் சிறையில் உள்ளார்.நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, கவர்னருக்கு அனுப்பியது. அதன் மீது, கவர்னர் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை.


விசாரணை

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனு:கவர்னருக்கு என, தனிப்பட்ட உரிமை கிடையாது; அமைச்சரவை ஆலோசனைப்படி தான், அவர் இயங்க வேண்டும்.சிறையில் இருந்து விடுவிக்க, தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, கவர்னருக்கு அனுப்பி விட்டது. அமைச்சரவையின் ஆலோசனைப்படி, அவர் செயல்படவில்லை. அதனால், நான் விடுதலையாகவில்லை.எனவே, ௨௦௧௮ செப்டம்பரில் இருந்து, சட்டவிரோத காவலில் தொடர்கிறேன். இது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அமைச்சரவையின் ஆலோசனைக்கு, கவர்னர் கட்டுப்பட்டவர். ௨௦௧௯ செப்., ௧௦ல், என்னை விடுதலை செய்திருக்க வேண்டும்.


சட்டவிரோத காவலில் உள்ள என்னை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.தள்ளி வைப்புமத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மத்திய அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 'நளினி உள்ளிட்ட, ஏழு பேரை விடுதலை செய்யக்கோரிய மனுவை, ௨௦௧௮ ஏப்ரலில், மத்திய அரசு நிராகரித்துள்ளது.

'இவர்களை விடுவித்தால், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறான முன்னுதாரணமாகி விடும்' என, கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இவ்வழக்கில், மத்திய அரசையும் சேர்த்து, விசாரணையை, வரும், ௨௮ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஜன-202009:01:14 IST Report Abuse
Girija பி ஜெ பி மத்திய அரசு எதற்கு இதை தோளில் போட்டுகொண்டு சுமக்கிறது? சோனியா ராகுல் பிரியங்கா இவர்களிடம் பிரச்னையை விட்டுவிடுவது தானே ? தமிழ்நாட்டில் ரெட்டை வேடம் போடும் திமுகவும் காங்கிரஸும் சரியாக மாட்டிக்கொள்ளும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X