இதே நாளில் அன்று

Added : ஜன 07, 2020
Advertisement
 இதே நாளில் அன்று


ஜனவரி, 8, 1642


கலிலியோ கலிலி: இத்தாலி நாட்டில், பைசா நகரில், வின்சென்சோ கலிலி -- குய்லியா ஆம்மனட்டி தம்பதிக்கு மூத்த மகனாக, 1564 பிப்ரவரி 15ல் பிறந்தார். விண்வெளியை ஆய்வு செய்வதில் கலிலியோவுக்கு தீராத ஆர்வம்; அதன் காரணமாக, 'டெலஸ்கோப்' கண்டுபிடித்தார்.

'பூமியும், மற்ற கோள்களும், சூரியனை சுற்றி வருகின்றன' என்ற உண்மையை கண்டறிந்து கூறியதால், எட்டாவது போப் அர்பன், கலிலியோ மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

மதமும், அரசியலும் நெருக்கியதால், வேறு வழியின்றி, தன் சூரிய மையக் கொள்கையை, அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதன் பிறகும், அவர் சாகும் வரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 1642, ஜனவரி, 8ல் காலமானார்.

கலிலியோ இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X