தமிழகத்தில் அடுத்தது பா.ஜ., ஆட்சி தான்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் அடுத்தது பா.ஜ., ஆட்சி தான்!'

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (3)
Share

சென்னை : ''தமிழகத்தில், பா.ஜ., வளர்ச்சியை கண்டு, கோட்டை மட்டுமல்ல, அறிவாலயமும் அரண்டு போய் உள்ளது,'' என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் பேசினார்.


சென்னை, எழும்பூரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பா.ஜ., சார்பில், நேற்று மாலை பேரணி நடந்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலர் வானதி சீனிவாசன், தேசிய துணை செயலர் ஜெயபாண்டியன், தேவநாதன், நடிகர் ராதாரவி உட்பட, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.இல.கணேசன் பேசும்போது, ''குடியுரிமை சட்டத்தால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இச்சட்டத்தால், 'எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.
பின், அவர்களே அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, மக்களை திசை திருப்புகின்றனர்,'' என்றார்.தேவநாதன் பேசும்போது, ''குடியுரிமை சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது. அடுத்து தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி தான். இந்த கூட்டத்தை பார்த்து உளவுத்துறை, கோட்டைக்கு தகவல் அளித்துள்ளது. கோட்டை மட்டுமல்ல, அறிவாலயமும் அரண்டு போய் உள்ளது,'' என்றார்.நடிகர் ராதாரவி பேசும்போது, ''நீங்கள், ஏன் பா.ஜ.,வில் சேர்ந்தீர்கள் என்று கேட்கின்றனர். பா.ஜ., கட்சி, இந்தியாவில் தானே உள்ளது.

நான் என்ன, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் உள்ள கட்சியிலா சேர்ந்து விட்டேன். தமிழகத்தில் தாமரை மலரும். அடுத்து, பா.ஜ., ஆட்சி அமைக்கும்,'' என்றார்.சென்னையை தொடர்ந்து, நாளை திருச்சியில், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியை, தமிழக, பா.ஜ., நடத்துகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X