சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் குழாயில் விஷம் கலந்தவர் கைது

Added : ஜன 07, 2020
Advertisement

கூடலுார் : கூடலுார் அருகே, பழங்குடி கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில், விஷம் கலந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார், தேவர்சோலை அருகேஉள்ள, கருக்கபாலி பழங்குடி கிராமத்தில், 18 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு, தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை, கிராமத்துக்கு சப்ளை செய்யப்பட்ட குடிநீரில், மருந்து வாசனை வந்துள்ளது. பொதுமக்கள், இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார், பேரூராட்சி ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதில், கிணற்றிலிருந்து, குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில், விஷம் கலந்திருப்பது, தெரிய வந்தது.இதை தொடர்ந்து குடிநீர் குழாய், தொட்டியை, பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.தேவர்சோலை போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த, ராஜன், 46, என்பவரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக, குழாயில் விஷம் கலந்தது, தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X