சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 மனைவியர்; 10 கள்ளக்காதலிகள் 'மஜாவாக' வாழ்ந்த மோசடி பேர்வழி

Added : ஜன 07, 2020
Advertisement
 10 மனைவியர்; 10 கள்ளக்காதலிகள் 'மஜாவாக' வாழ்ந்த மோசடி பேர்வழி

சேலம் : வேலை வாங்கித் தருவதாக, இளைஞர்களை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி, 10 மனைவியர், 10 கள்ளக்காதலிகளுக்கு மோசடி பணத்தை செலவு செய்துள்ளது, விசாரணையில் தெரியவந்தது.

மாற்றுத் திறனாளிசேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர், அஸ்ரப் அலி, 24; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.பெங்களூரில் உள்ள தனியார் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது, பஸ்சில் உடன் பயணித்த, பார்வையிழந்த மாற்றுத் திறனாளி, சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட், 38, என்பவருடன் தொடர்பு கிடைத்தது.அஸ்ரப் அலியின் மொபைல் எண்ணை பெற்ற டேவிட், அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள, 'ரெனால்ட் நிசான்' கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பி, 2019 மார்ச், 27 துவங்கி, மே, 13 வரை, மூன்று தவணைகளாக, 4.25 லட்சம் ரூபாயை டேவிட்டிடம், அஸ்ரப் அலி கொடுத்துஉள்ளார்.ஆனால், வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அஸ்ரப் அலி புகாரின்படி, சூரமங்கலம் போலீசார், டேவிட்டை நேற்று முன்தினம் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:பார்வையிழந்த டேவிட், பஸ் பயணியரிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போன் எண்களை பெற்று, அவர்களிடம் நட்பு ஏற்படுத்தி கொள்வார்.

தனக்கு அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆட்கள் இருப்பதாக கூறி, பணத்தை பெற்று, மோசடியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஐந்து ஆண்டுகளில், 62 பேரிடம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, சேலத்தில், ஆறு மனைவியர், கரூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோட்டில் தலா ஒரு மனைவி என மொத்தம், 10 மனைவியருடன் வசித்துள்ளார்.விசாரணைஇவர்கள் தவிர, இவருக்கு, சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் தலா, இரண்டு கள்ளக்காதலிகள் என, மொத்தம், 10 பேர் உள்ளனர்.

மோசடியில் கிடைக்கும் பணம் அனைத்தையும், மனைவியர், காதலிகளிடம் கொடுத்து, உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். இதை, அவர் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.டேவிட்டின் வாக்குமூலம், விசாரணை நடத்திய போலீசாரை மட்டுமின்றி, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X