சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை மீட்பு

Added : ஜன 07, 2020
Advertisement
 ரூ.5 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை மீட்பு

ஆத்துார் : கெங்கவல்லியில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலையை விற்பனை செய்ய முயன்றவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கெங்கவல்லி பகுதியில், பழமையான பஞ்சலோக அம்மன் சிலை, 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.நேற்று காலை, 9:00 மணியளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கெங்கவல்லியில் உள்ள ராஜசேகர், 45, என்பவரது வீட்டில், பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டனர்.இந்த சிலை, ஒன்றே கால் அடி உயரம், 6.5 கிலோ எடை உள்ளது. சிலையை கடத்தி விற்க முயன்ற ராஜசேகரை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட அம்மன் சிலை, எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும், இதில் தொடர்புடையவர்களை தேடி வருவதாகவும், சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X