சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தல் புகார்: பெண் கவுன்சிலர் மறுப்பு

Added : ஜன 07, 2020
Advertisement

தேனி மாவட்டம், சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள, 10ல், ஆறு வார்டுகளில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, அ.தி.மு.க.,விற்கு, இரண்டு கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.நேற்று முன்தினம், சின்னமனுார் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்ற பின், முதல் வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ஜெயந்தி, கட்சி நிர்வாகிகளுடன் செல்ல மறுப்பு தெரிவித்தார்.

அவர், போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவரிடம், தி.மு.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தியதால், வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று அதிகாலை, போலீஸ் பாதுகாப்புடன், ஜெயந்தி வெளியூர் சென்று விட்டார். அ.தி.மு.க.,வினர், தங்கள் கட்சி கவுன்சிலரை கடத்தி விட்டதாக, தி.மு.க.,வினர், போடி, டி.எஸ்.பி., ஈஸ்வரனிடம் புகார் செய்தனர். ஜெயந்தி கூறுகையில், ''தி.மு.க., நிர்வாகிகள் எனக்கும், மகனுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதால், திண்டுக்கல்லில் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளேன். என்னை யாரும் கடத்தவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X