பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கான விதிகளை தளர்த்த வேண்டும்

Added : ஜன 07, 2020
Share
Advertisement

சென்னை : 'ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடக்க, அதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பேரவையின் மாநில தலைவர் ஜெயகார்த்தி கூறியதாவது: மருத்துவ பரிசோதனையின் போது, காளைகளின் உயரத்தை பார்த்து, அனுமதி மறுக்கப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில், காளைகள் குறைந்த உயரமே இருக்கும். காளைகளின் வயது, பல் போன்றவற்றை அறிந்து, அனுமதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா நடத்த, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, முழுமையாக அனுமதி வழங்க வேண்டும். பயிற்சி இல்லாத வீரர்களை விளையாட்டில் அனுமதிக்க கூடாது. இவ்வாறு செய்தால், ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஒரு மணி நேரத்திற்கு, 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்; 200க்கும் அதிகமான வீரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், அரசே காப்பீடு வழங்க வேண்டும். விதிகளை தளர்த்தி, விருப்பம் தெரிவிக்கும் அனைத்து ஊர்களிலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.துாத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. இந்த ஆண்டு அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இதுதொடர்பாக, முதல்வர், துணை முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X