சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.ஐ.ஏ., விசாரணை

Added : ஜன 07, 2020
Advertisement

திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் இருவரிடம், என்.ஐ.ஏ., எனும், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
இலங்கையில், ஏப்., 21ல் ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு பின், சர்வதேச அளவில், பயங்கரவாத கும்பலுக்கு நிதி சேகரித்து தருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.துபாயில் வசித்த இந்தியர்கள், 14 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டில், ஜூலை, 20ல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்தனர்.

அதே கால கட்டத்தில், அரபு நாடுகளில் பணிபுரிந்து, தமிழகம் வந்த மேலப்பாளையம் செய்யது முகம்மது புகாரி, 32, அழவிசாகிப், 30 ஆகியோரிடம், கேரளா, கொச்சியில் இருந்து வந்த, தேசிய புலனாய்வு அமைப்பின்,டி.எஸ்.பி., உதயகுமார் தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 2;30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X