வரி செலுத்தாதவர்களை துன்புறுத்த மாட்டோம்: நிர்மலா

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
BJP,Nirmala,NirmalaSitharaman,நிர்மலா,நிர்மலாசீதாராமன்

புதுடில்லி: 'ஒழுங்காக வரி செலுத்தாதவர்களை துன்புறுத்த மாட்டோம்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த, சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பின் மாநாட்டில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஒழுங்காக வரி செலுத்தாதவர்களை துன்புறுத்த மாட்டோம். வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வரி முறைகள் எளிமையாக்கப்படும். வருமான வரியில், வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவது, மிரட்டப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வசதி ஏற்படுத்தப்பட்டது.

வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, அதை யார் பரிசீலிக்கிறார் என்பது தெரியாது. அதேபோல், பரிசீலிக்கும் அதிகாரிக்கும், தாங்கள் யாருடைய கணக்கை பார்க்கிறோம் என்பது தெரியாது. இதற்காக, டி.ஐ.என்., எனப்படும் ஆவண அடையாள எண் வழங்கப்படுகிறது. வருமான வரி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைக்கும் இதை பயன்படுத்தலாம்.


latest tamil news



ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை எளிமைபடுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை பெற்று உள்ளோம். வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது. உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில், இங்கும் அதுபோன்ற திருவிழா நடத்தப்படும். ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரண நகைகள், யோகா உள்ளிட்ட துறைகளில், இந்தத் திருவிழா, இந்தாண்டு முதல் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
08-ஜன-202013:39:50 IST Report Abuse
 Sri,India பல லட்சம் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் பள்ளிகள் ,கல்லூரிகளில் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் . வருமான வரித்துறையை ஏமாற்றும் பள்ளிகளுக்கு எதிராக யாரவது பொது நல வழக்கு தாக்கல் செய்தால் மட்டுமே பள்ளிகளின் கொள்ளையடிக்கும் கொள்கைக்கு முடிவு கிடைக்கும் . வாகன அபராதம் வசூல் செய்யவே டிஜிட்டல் முறை வந்தும் கூட பள்ளிகளில் இன்னமும் டிஜிட்டல் முறையில் பணம் வசூல் செய்யாமல் இருப்பது வருமான வரித்துறையை ஏமாற்றும் செயல் .
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
08-ஜன-202011:33:43 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வரியும் செலுத்தாமல் வங்கியில் கடனும் பெற்றவர்களுக்கு அதை நாங்கள் வாரா கடன் என தள்ளுபடி செய்வாம் ஏன் எனில் அது சாமானியர்கள் வங்கியில் செலுத்திய பணம் நாங்கள் எப்போதும் கார்பொரேட் களின் உற்ற தோழன்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஜன-202011:24:24 IST Report Abuse
vbs manian எதற்காக துன்புறுத்த வேண்டும். குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X