அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் உரை கிழிப்பு: அன்பழகன், 'சஸ்பெண்ட்'

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (22)
Advertisement
 கவர்னர் உரை கிழிப்பு: அன்பழகன், 'சஸ்பெண்ட்'

சென்னை : கவர்னர் உரையை, சபாநாயகர் மேஜை மீது கிழித்து வீசிய, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. தி.மு.க., சார்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகன் பேசினார். 80 சதவீதம்அவர் பேசுகையில், ''உள்ளாட்சி தேர்தலில், அரசு முறைகேடு செய்யாமல், முறையாக நடத்தியிருந்தால், தி.மு.க., 80 சதவீத வெற்றிகளை பெற்றிருக்கும்.''ஆனால், ஒரு அமைச்சர், தி.மு.க.,விற்கு இறங்குமுகம் என்கிறார். அவர் அரைகுறை என்பது, அனைவருக்கும் தெரியும். சட்டம் ஒழுங்குசரியில்லை; ஆனால்,முதலிடம் என்கின்றனர்,'' என்றார்.

முதல்வர் இ.பி.எஸ்., குறுக்கிட்டு, ''எந்த ஆதாரத்தில், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறீர்கள். புள்ளிவிபரத்தோடு மத்திய அரசு, முதலிடம் கொடுத்துள்ளது.''உங்களுடைய ஆட்சியில் நடந்ததை, புள்ளிவிபரமாக தெரிவிக்கட்டுமா; உங்கள் மேல் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்பது, எங்களுக்கு தெரியும். அதை எல்லாம் பேசுவது முறையாக இருக்காது. நீங்கள் உள்நோக்கத்தோடு பேசுவதை விடுத்து, உண்மை நிலையை எடுத்துக் கூறுங்கள்,'' என்றார்.அப்போது, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, பதில் அளிக்க எழுந்தார். உடனே அன்பழகன், அவரை பார்த்து, ஒருமையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசப்பட்டனர்.

பதிலுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து கோஷமிட, சபையில் பதற்றம் ஏற்பட்டது.இரு தரப்பிலும், 'மைக்' இணைப்பு இல்லாமல், சரமாரியாக தகாத வார்த்தைகளை கூறினர். சபாநாயகர் தனபால் எழுந்து, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, அமர வைத்தார். முறையற்றது பின், அவர் பேசுகையில், ''அமைச்சர் பதில் அளிக்க, அனுமதி கோரினார்; நான் அனுமதி வழங்கினேன். அவரை ஒருமையில் அன்பழகன் பேசியது, முறையற்ற செயல். இதை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்,'' என்றார்.

அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம் எழுந்து, ''ஒருமையில் அமைச்சரை பேசிய அன்பழகனை, சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும்,'' என்றார்.உடனே, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, அன்பழகன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து பேசிய அன்பழகன், ஸ்டாலின் பேசிய கருத்துக்களை, சபை குறிப்பிலிருந்து நீக்கும்படியும், அமைச்சர் மனம் புண்படும்படி பேசியிருந்தால், தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.அதை ஏற்று, ஸ்டாலின் பேசியது, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அன்பழகன், ''புதுக்கோட்டையில், அமைச்சர் பங்கேற்ற விழாவில், ஒரு அதிகாரியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தரக்குறைவாக பேசியுள்ளார். அவர் சிறுபான்மை யினத்தை சேர்ந்தவர்.''சிறுபான்மை என்றாலே, உங்களுக்கு பிடிப்பதில்லை,'' எனக் கூற, விவாதம் குடியுரிமை திருத்த சட்டம் பக்கம் திரும்பியது. அதற்கு, அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்க, ஸ்டாலின், துரைமுருகன் போன்றோர் கேள்வி எழுப்ப, மீண்டும் உதயகுமார் பதில் அளிக்க, விவாதம் நீண்டது.இறுதியில் நேரமாகி விட்டது எனக்கூறி, அன்பழகனை, ஒரு நிமிடத்தில், பேச்சை முடித்து கொள்ளும்படி, சபாநாயகர் கூறினார்.
இதனால், கோபமான அன்பழகன், ''நான் பேசவே இல்லை. ஒரு நிமிடத்தில் முடி என்றால், இப்படியே முடித்து கொள்ள வேண்டியது தான்,'' என்றார். வெளியேறினார்அதையடுத்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குணசேகரனை பேச அழைத்தார், சபாநாயகர்.அவர் பேச துவங்கியதும், அன்பழகன் தன் இருக்கையிலிருந்து, சபாநாயகர் இருக்கைக்கு சென்றார். தன் கையிலிருந்த, கவர்னர் உரையை காண்பித்து, சபாநாயகரிடம் பேசினார். அவர் பதில் கூறிக் கொண்டிருந்த போது, கவர்னர் உரையை கிழித்து, சபாநாயகர் மேஜை மீது வைத்துவிட்டு வெளியேறினார், அன்பழகன். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சபாநாயகர், அவரை இந்த கூட்டத்தொடர் மட்டுமின்றி, அடுத்த கூட்டத் தொடர் வரை, சபை நடவடிக்கையிலிருந்து நீக்கி வைப்பதாக அறிவித்தார்.

இது தொடர்பான தீர்மானத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கொண்டுவர, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், தண்டனையை குறைக்கும்படி, துரைமுருகன் வேண்டு கோள் விடுத்ததை ஏற்று, 9ம் தேதி வரை, அன்பழகன் சபை நடவடிக்கையிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.கிழித்தது ஏன்?''என்னை பேச அனுமதிக்காததால், கவர்னர் உரையை கிழித்து போட்டேன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சட்டசபையில், என்னை பேச விடாமல், அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். என் கருத்து முழுமையாக சபையில் இடம்பெறக் கூடாது என்பதில், உறுதியாக இருந்தனர். உள்ளாட்சி தேர்தல் நன்றாக நடந்தது என, ஆளும் கட்சி தரப்பில் பேசினர். நான் முறைகேடுகளை சுட்டிக்காட்டி பேசினேன். என்னை பேச விடாமல் செய்தனர். ஏராளமான குறிப்புகளை, பேச வைத்திருந்தேன். சபாநாயகரிடம் குறிப்புகளை காண்பித்து, ஐந்து நிமிடம் பேச அனுமதி தரும்படி கேட்டும், அவர் தர மறுத்ததால், என் உணர்ச்சியை காட்ட, கவர்னர் உரையை கிழித்தேன். இவ்வாறு, அன்பழகன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜன-202016:09:05 IST Report Abuse
Endrum Indian எனக்கு தெரிஞ்ச ஒரே தண்டனை அதே இடத்தில் உடனே என்கவுன்ட்டர்???அந்த கட்சி தலைவர் இனிமேல் எம் எல் ஏ எம் பி பதவிக்கு 7 வருடம் போட்டியிட முடியாது. இதை செய்து பாருங்கள் எந்த Come Naughty யும் இந்த மாதிரி யோசிக்கவே மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
08-ஜன-202014:59:00 IST Report Abuse
kumaresan வீட்டுல எதுவும் கிழிக்க முடியாத பட்சத்தில் சட்டசபையில் கவர்னர் உரையை கிழித்தார் எதோ ஒன்னை கிழிச்சிட்டார் விடுங்க .
Rate this:
Share this comment
Cancel
Karthik - Doha,கத்தார்
08-ஜன-202012:59:27 IST Report Abuse
Karthik அவை மாண்பு தெரியாத, தேவையில்லாமல் குறுக்கிட்டு பேசும், வெளிநடப்பு செய்யும் MLA மற்றும் MPக்களைத் தகுதி நீக்கம் செய்யும் சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X