பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன தொடர் போராட்டம் அறிவிப்பு

Added : ஜன 07, 2020
Share
Advertisement

சென்னை : 'ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:நாட்டின், சில்லரை வணிகத்தில், 37 சதவீதத்தை, ஆன்லைன் வர்த்தகம் அபகரித்து விட்டது. மீதியுள்ள வணிகத்தை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், இணைய வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.அதன் துவக்கமாக, பிப்ரவரி, 11ல், தமிழகத்தில், 108 இடங்களில், தெருமுனை கூட்டம் நடத்தப்படும்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யாவிட்டால், மே, 5ல், திருவாரூரில் நடக்கும் வணிகர்கள் தின மாநாட்டில், இந்திய வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, நாடே ஸ்தம்பிக்கும் வகையில், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X