பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர காவல் படை ஓவிய போட்டி

Added : ஜன 07, 2020
Advertisement
 கடலோர காவல் படை ஓவிய போட்டி

சென்னை : இந்திய கடலோர காவல் படையின், 44வது தினத்தை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில், 450 மாணவர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து, இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய கடலோர காவல் படையின், 44வது தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள, விமானப்படை தளத்தில், நேற்று நடந்தது. சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 450க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.'ஆயுத படைகள், துாய்மை இந்தியா மற்றும் பிட் இந்தியா' போன்றவை, ஓவியப் போட்டியின் தலைப்புகளாக கொடுக்கப்பட்டன.

இந்த தலைப்புகளில், மாணவர்கள் ஓவியம் தீட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், கடலோர காவல் படையின், 'டார்னியர்' விமானம் உட்பட, பல்வேறு வகையான விமானங்கள் குறித்தும், அதன் வாயிலாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும், மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X