சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் இரண்டு ஆர்ப்பாட்டம்

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : டில்லியில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, சென்னையில், ஒரே இடத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியினரும், கல்லுாரி மாணவர்களும், அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில், சமீபத்தில், மர்ம கும்பல் புகுந்து, மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது.இதை கண்டித்து, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், நேற்று தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் சஞ்சய்தத், சி.டி.மெய்யப்பன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''ஹிந்துக்களுக்கு, பா.ஜ., மட்டும் ஆதரவு போலவும், முஸ்லிம்களுக்கு, தி.மு.க., காங்கிரஸ் ஆதரவு போலவும், திட்டமிட்டு பொய் பிரசாரத்தை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது, ஓட்டு வங்கிக்காக நடத்தப்படுகிற அரசியல்,'' என்றார். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கல்லுாரி மாணவர்கள் சார்பில், மற்றொரு ஆர்ப்பாட்டத்தை, அதே இடத்தில் நடத்த, போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதனால், கல்லுாரி மாணவர்கள், அங்கே குவிந்திருந்தனர்.

இருப்பினும், காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டம் முடியும் வரை காத்திருக்காமல், மேளதாளங்களுடன், தங்களது ஆர்ப்பாட்டத்தை துவக்கினர். அந்த நேரம், அழகிரி பேசிக் கொண்டிருந்ததால், அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. உடனே, அழகிரி, ''சிறிது நேரம் அமைதியாக இருங்கள்,'' என்றார். ஆனால், மாணவர்கள் கண்டுகொள்ளாததால், அழகிரி பேச்சை முடித்து கொண்டார். பின், அவர் மாணவர்களிடம் சென்று, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது, காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே, கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆவேசப்பட்ட காங்கிரசாரை, அழகிரி கண்டித்ததால் மோதல் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X