அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நெல்லை கண்ணன் கைது ஏன்?'

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : ''பேச்சு சுதந்திரத்தை மீறி, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வரம்புமீறி பேசியதால், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்: பிரின்ஸ் - காங்.,: சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில், தமிழகம் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலம் போட்டதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வழக்கு மொழியில் பேசியதற்காக, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்; வேறு எந்த தவறையும் அவர் செய்யவில்லை. முதல்வர் இ.பி.எஸ்.,: கோலத்தை அவர்களது வீட்டில் போட்டிருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. மற்றவர்களின் வீடுகளில் கோலம் போட்டதாக புகார் வந்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

எந்த கட்சியாக இருந்தாலும், அதை பின்பற்ற வேண்டும். 'சோலியை முடிக்க வேண்டும்' என்று நெல்லை கண்ணன் பேசியுள்ளார். அதனால், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது. பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வரம்பை மீறி பேசியதால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீண்பழி சுமத்தி தவறான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X