கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரஜினி நடித்த, 'தர்பார்' படத்தை மலேஷியாவில் வெளியிட நிபந்தனை

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : ரஜினி நடித்த, 'தர்பார்' படத்தை, மலேஷியாவில் வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ரஜினி நடித்த, தர்பார் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை திரையிடப்பட உள்ளது. லைக்கா நிறுவனம், படத்தை தயாரித்துள்ளது.படத்தை வெளியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மலேஷியாவைச் சேர்ந்த, 'டி.எம்.ஒய்., கிரியேஷன்ஸ்' நிறுவனம் தாக்கல் செய்த மனு:மலேஷியாவில், ௨.௦ படத்தை திரையிடவும், வினியோகிக்கவும், லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ௨௦ கோடி ரூபாய் கொடுத்தோம். படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால், கூடுதலாக, ௧௨ கோடி ரூபாய் வழங்கினோம். மொத்தத்தில், ௩௨ கோடி ரூபாய் கொடுத்தோம்.

கூடுதலாக வாங்கிய, ௧௨ கோடி ரூபாய் மற்றும், ௨௦௧௯ நவம்பர் வரையிலான வட்டியை சேர்த்து, ௨௩.௭௦ கோடி ரூபாய், எங்களுக்கு வர வேண்டும். தர்பார் படத்தை வெளியிட்டால், எங்களுக்கு வர வேண்டிய பணத்தை வசூலிப்பதில் பிரச்னை ஏற்படும்.எனவே, ௨௩.௭௦ கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்கும்படி, லைக்கா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். படத்தை வெளியிட, லைக்கா நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பாஸ்கர், லைக்கா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, ஹேமா சீனிவாசன் ஆஜராகினர்.மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர், ௨.௦ படத்துக்காக அளித்த, ௨௦ கோடி ரூபாய்க்கு, வட்டி பெற உரிமை இல்லை. மீதி, ௧௨ கோடி ரூபாயைப் பொறுத்தவரை, ஆதாரம் தாக்கல் செய்வதன் அடிப்படையில் அமையும்.எனவே, லைக்கா நிறுவனம், ௪.௯௦ கோடி ரூபாய், உயர் நீதிமன்றத்தில், 'டிபாசிட்' செய்ய வேண்டும். அல்லது அந்த தொகைக்கு, வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும்.பணம் டிபாசிட் அல்லது வங்கி உத்தரவாதம் அளிக்கும் வரை, தர்பார் படத்தை, மலேஷியாவில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
08-ஜன-202016:49:39 IST Report Abuse
Baskar லைக்காவும் ரஜினியும் ஒன்று தான். லைக்கா பணம் தருகிறேன் என்று ஏமாற்றுவான். ரஜினியோ சும்மா கை காலை ஆட்டி விட்டு மக்களை ஏமாற்றுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X