கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வருமான வரி வழக்கு கார்த்தி மனு தள்ளுபடி

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : வருமான வரித்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை, சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், முட்டுக்காட்டில் இருந்த தங்களுக்கு சொந்தமான நிலத்தை, அக்னி எஸ்டேட் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு, ஏக்கர், ௪.௫ கோடி ரூபாய் மதிப்பில் சில ஏக்கர் நிலத்தை விற்றுள்ளனர். விற்பனை ஒப்பந்தம், கார்த்தி மற்றும் அவரது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவில், சந்தை மதிப்பு, மூன்று கோடி ரூபாய் என, குறிப்பிட்டனர். மீதமுள்ள, 1.25 கோடி ரூபாயை ரொக்கமாக பெற்றுள்ளனர்.

இதன்படி, ஸ்ரீநிதி, 1.35 கோடி ரூபாயும், கார்த்தி, 6.38 கோடி ரூபாயும் ரொக்கமாக வாங்கி உள்ளனர். இந்த பண பரிமாற்றத்தை, தங்களது ஆண்டு வருமான கணக்கில், அவர்கள் காட்டவில்லை.இது தொடர்பான வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, கார்த்தியும், அவரது மனைவி ஸ்ரீநிதியும், சிறப்பு நீன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி டி.லிங்கேஸ்வரன், நேற்று அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, கார்த்தியும், ஸ்ரீநிதியும் வரும், 21ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X