பொய்கள் வென்றதில்லை: பிரியங்கா சாடல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
குடியுரிமை சட்டம், பொய், பிரியங்கா, தாராபூரி, சதாப்_ஜாபர்

புதுடில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி தாராபூரியும், காங்கிரஸ் தொண்டர் சதாப் ஜாபரும், நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து, கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, ''பொய்கள் ஒரு போதும் வென்றதில்லை,'' என்றார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும், பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், உ.பி., தலைநகர் லக்னோவில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுட்ட, காங்கிரஸ் தொண்டரும், பெண் ஆர்வலருமான சதாப் ஜாபர், டிசம்பர், 19ல் கைது செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாள், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான தாராபூரியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, இருவரின் குடும்பத்தினரையும் சந்தித்த பிரியங்கா, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சதாப் ஜாபர், தாராபூரி உள்ளிட்ட 15 பேருக்கு, லக்னோ நீதிமன்றம், கடந்த சனிக்கிழமையன்று ஜாமின் வழங்கியது. இருந்தும், சில நடைமுறைகளால், அவர்கள், மூன்று நாட்கள் கழித்து, நேற்று தான் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து, பிரியங்கா வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவு: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி தராபூரியும், காங்கிரஸ் தொண்டர் சதாப் ஜாபரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, நீதிமன்றம் ஆதாரம் கேட்டது. மாநில போலீசார், ஆதாரங்கள் இல்லாமல் முழித்தனர். அப்பாவி மக்களை கைது செய்து, பா.ஜ., தன் உண்மையான முகத்தை காண்பித்து விட்டது. பொய்கள் ஒருபோதும் வென்றதில்லை. இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
08-ஜன-202021:52:26 IST Report Abuse
Mahesh ரொம்ப விரக்தியா பேசாதீங்க... விடுங்க...
Rate this:
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
08-ஜன-202021:34:00 IST Report Abuse
Mani iyer Vijayakumar மதவாத கூவல் காங்கி உறுபடாது
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஜன-202020:00:55 IST Report Abuse
konanki ஆமாங்க மணிமேகலை கேம்பிரிட்ஜ் பட்டதாரி ன்னு சொன்னதை பொய் ன்னு கண்டு பிடிச்சிட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X