பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : அரசின், 'சி, டி' பிரிவு பணியாளர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து, 'சி, டி' பிரிவு அரசு பணியாளர்கள்,உள்ளாட்சி பணியாளர்கள், அரசு மானியம் பெறும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, உச்சவரம்பாக, 3,000 ரூபாய் போனஸ் கிடைக்கும்.கடந்த, 2018 ஏப்ரல், 1 முதல், 2019 மார்ச், 3 வரை, ஓராண்டு முழுவதும் பணிபுரிந்து, தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் அனைவரும், தற்காலிக மிகை ஊதியத்தொகை முழுவதையும் பெற தகுதியுடையவர்கள். மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோருக்கு, சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும்.

ஓய்வு பெற்றவர்களில், 'சி, டி' பிரிவு பணியாளர்கள், கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள். மற்றும் ஊராட்சி செயலர்கள், கிராம நுாலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் போன்றோருக்கு, பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப் பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
08-ஜன-202009:48:18 IST Report Abuse
Ramachandran Rajagopal இவர்களுக்கெல்லாம் பொங்கல் இனாம் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிலையில் பொங்கல் போனஸ் வழங்குவதை நிறுத்த வேண்டும் அல்லது பொங்கல் இனாம் ரூபாய் ஆயிரம் வழங்காமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X