அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன சாலைகளை சீரமைக்க ரூ.57 கோடி

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : ''வனப்பகுதியில், 576 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை சீரமைக்க, 57.30 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - சின்னராஜ்: மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட, நெல்லித்துறை ஊராட்சியில், விளாமரத்துார் முதல் பில்லுார் அணை வரையிலான, வனச்சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.அமைச்சர் சீனிவாசன்: இதற்கு, முறைப்படி வனத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தால், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தர, நடவடிக்கை எடுக்கப்படும்.சின்னராஜ்: இந்த சாலைக்கு, ஏற்கனவே விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்கவில்லை.

சாலை அமைக்க, ஊரக வளர்ச்சித் துறையில், 6.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அனுமதி கிடைக்காததால், பணம் திரும்ப சென்று விட்டது.அமைச்சர் சீனிவாசன்: முறையாக விண்ணப்பம் செய்யுங்கள். அனுமதி பெற்றுத் தர, வனத்துறை நடவடிக்கை எடுக்கும். வனப் பகுதியில் உள்ள, 576 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை சீரமைக்க, முதல்வர், 57.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X