பொது செய்தி

இந்தியா

12,000 டன் வெங்காயம் இறக்குமதி

Added : ஜன 07, 2020
Advertisement

புதுடில்லி : மத்திய அரசு, இதுவரையிலும், 12 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், மாநிலங்களுக்கு, 1 கிலோ, 49 ரூபாயிலிருந்து, -58 ரூபாய் வரைக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

உச்சத்தை தொட்டதுவட மாநிலங்களில், வெங்காய விளைச்சலில், 25 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக, நாடு முழுவதும், வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. அதன் விலை, 150 ரூபாய் வரை உயர்ந்து, சாமானிய மக்களை, பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர, மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து, வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இதனால், அதன் விலை, சற்று குறையத் தொடங்கியுள்ளது.

பிரச்னைஇந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான், நேற்று கூறியதாவது:உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, இதுவரை, 12 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளோம். அதில், 1,000 டன் வெங்காயம், ஏற்கனவே, டில்லி, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரள மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. சில்லறை வினியோகத்திற்காக, மாநிலங்களுக்கு, 1 கிலோ வெங்காயம், 49 ரூபாயிலிருந்து, - 58 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாத இறுதிக்குள், கூடுதலாக, 36 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. அது, வெங்காய விலை பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர உதவும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X