பொது செய்தி

தமிழ்நாடு

'துணை மின் நிலைய பணி: அமைச்சர் உறுதி

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : ''சென்னை, கொளத்துார் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, ஒரு மாதத்தில் முடிக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - மருதமுத்து: கெங்கவல்லி தொகுதி, இலுப்பநத்தம் ஊராட்சியில், துணை மின் நிலையம் அமைக்க, அரசு முன்வருமா?அமைச்சர் தங்கமணி: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட, நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 2018 அக்டோபர் 13ல் துவக்கப்பட்டது. ஒப்பந்தப்படி அந்தப் பணியை, 2019 அக்டோபர், 22க்குள் முடித்திருக்க வேண்டும்.

இதுவரை, அப்பணி நிறைவு செய்யப்படவில்லை. இப்பணியை விரைவாக முடித்து, மக்களுக்கு தடையின்றி, சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.அதேபோல, கணேஷ்நகர் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்க, 2009ல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியையும் விரைவாக முடிக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது;

டிரான்ஸ்பார்மர் வந்து விட்டது. இன்னும், ௧௦ நாட்களில், பணி முடிந்து விடும். அதிகபட்சம், ஒரு மாதத்தில் முடிக்கப்படும். கணேஷ் நகரில், நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில், பணிகள் நிறைவேற்றப்படும். அதேபோல், 65 கி.மீ.,க்கு புதைவட கேபிள் அமைக்கும் பணி முடிந்துள்ளது; இன்னும், 190 கி.மீ.,க்கு, அமைக்க வேண்டியுள்ளது. அதிகபட்சம் ஆறு மாதங்களில், அந்தப்பணிகள் முடிவடையும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X