அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Added : ஜன 07, 2020
Advertisement

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, கடிதம் கொடுத்தேன்; அதன் நிலை என்ன?சபாநாயகர் தனபால்: அந்த கடிதம், என் நடவடிக்கையில் உள்ளது.

எனவே, அந்த பொருள் குறித்து பேச அனுமதிக்க இயலாது.ஸ்டாலின்: மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சபாநாயகர்: நீங்கள் கொடுத்த கடிதம், என் நடவடிக்கையில் உள்ளதால், அது குறித்து பேச இயலாது. நான் விதிமுறைகளை எல்லாம் பார்த்த பின் தான், கடிதம் குறித்து முடிவெடுக்க முடியும்.எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: சட்டசபை இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. தீர்மானத்தை எடுத்துக் கொள்வேன் என்று, உறுதியாவது கொடுங்கள்.

சபாநாயகர்: உறுதி எல்லாம் கொடுக்க முடியாது. உரிய ஆய்வுக்கு பிறகே முடிவெடுக்க முடியும்.இவ்வாறு, சபாநாயகர் கூறியதும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதி அளிக்காததை கண்டித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஸ்டாலின் தலைமையில், வெளிநடப்பு செய்தனர்.அதே காரணத்திற்காக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து, ஸ்டாலின் கூறியதாவது: நாடு முழுவதும், பல்வேறு மாநில முதல்வர்கள், குறிப்பாக கேரளா, புதுவை, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், டில்லி, ஜார்கண்ட் மாநிலங்களில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க., ராஜ்யசபாவில் ஆதரித்து ஓட்டளித்தது. சட்டசபையிலாவது, அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர, வழிவகை செய்வர் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பா.ஜ.,விற்கு அடிமையாக, சேவகம் செய்யக்கூடியதாக, இந்த ஆட்சி உள்ளது. இதை கண்டித்து, வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X