ஜே.என்.யூ., வன்முறை: ஹிந்து ரக் ஷா தளம் பொறுப்பேற்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
ஜே.என்.யூ.,தாக்குதல், ஹிந்து ரக் ஷா தளம், ஜவடேகர், ராம _பிரான்

புதுடில்லி: டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 5ம் தேதி நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு, ஹிந்து ரக் ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


சரமாரி தாக்கு:

டில்லியில், உள்ள, ஜே.என்.யூ., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 5ம் தேதி மாலை, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பல்கலை., வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளுக்குள் சென்று, கண்ணில்பட்ட, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு தடிகளால், சரமாரியாக தாக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள், உடனடியாக, டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

பல்கலை., மாணவர் சங்க தலைவர் அய்ஷ் கோஷ் தலையில், காயம் ஏற்பட்டது. பா.ஜ.,வை சேர்ந்த மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அமைப்பான ஜே.என்.யூ., மாணவர் சங்கம் ஆகியவை, இந்த தாக்குதல் குறித்து ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தன.


சமூக வலைதளம்:

தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்து ரக் ஷா தளம் என்ற அமைப்பு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி, தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'வீடியோ' ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், கூறியிருப்பதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலை., தேச விரோத சக்திகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை, எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

பிங்கி சவுத்ரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர்களின் அடையாளத்தை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


போலீஸ் வேண்டுகோள்:

ஜே.என்.யூ., தாக்குதல் சம்பவம் தொடர்பாக, புகைப்படங்கள், வீடியோ மற்றும் தகவல்கள் இருந்தால், அதை பொதுமக்கள், உடனடியாக போலீசுடன் பகிர்ந்து கொள்ளுமாறு, டில்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பல்கலை., வளாகத்தில், தடயவியல் துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர் சங்க தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு:

ஜே.என்.யூ., பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் அய்ஷ் கோஷ் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, நேற்று கூறியதாவது: போலீசாரின் கண்காணிப்பை மீறி, பல்கலை.,யில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், எப்படி உள்ளே நுழைந்தனர். அப்போது, துணை வேந்தர் என்ன செய்து கொண்டு இருந்தார். தாக்குதல் நடத்தியவர்கள், பல்கலை.,யை விட்டு, சுலபமாக வெளியேறியதற்கு, யார் உதவினார்கள் போன்ற கேள்விகளுக்கு, விசாரணையில், பதில் வேண்டும். வன்முறையாளர்களால், கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான மாணவர் சங்க தலைவர் அய்ஷ் கோஷ் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு, அவர் கூறினார்.

தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாள், ஜே.என்.யூ., பல்கலையின் கணினி தொழில்நுட்ப அறை சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக, அய்ஷ் கோஷ் மற்றும், 19 மாணவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


வன்முறை தீர்வாகாது: துணைவேந்தர் கருத்து

வன்முறை சம்பவம் குறித்து, ஜே.என்.யூ., துணை வேந்தர் ஜகதீஷ் குமார், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த தாக்குதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எந்தவொரு பிரச்னைக்கும், விவாதங்கள் மற்றும் கலந்தாய்வின் மூலம் தீர்வு காண்பதில், நம் பல்கலை., பெயர் பெற்றுள்ளது. எதற்கும் வன்முறை தீர்வாகாது. எனவே, அனைத்து மாணவர்களும், வகுப்புகளுக்கு வந்து, இயல்பு நிலை திரும்ப உதவ வேண்டும். நடந்தவையைப் புறந்தள்ளிவிட்டு, புதிதாக துவங்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

''ஜே.என்.யூ., தாக்குதலில் ஈடுபட்டவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷங்களை எழுப்பியதாக, அமெரிக்காவின், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. அவர்கள் தீவிர ராம பக்தர்களாக இருப்பார்கள் போல் உள்ளது. அவர்களுக்கு எங்கும் ராம பிரான் தெரிகிறார். பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவில், கடந்த வாரம் நடந்த தாக்குதல் குறித்து, அவர்கள் எழுதியுள்ள செய்தியை படிக்க ஆவலாக இருக்கிறேன்''
- பிரகாஷ் ஜாவடேகர், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
08-ஜன-202021:28:52 IST Report Abuse
jagan சேதம் முழுவதையும் எதிர் கட்சி மற்றும் மாணவர் அமைப்புகளிடம் இருந்து 25 % வட்டியுடன் வசூலிக்க வேண்டும்
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
08-ஜன-202021:27:13 IST Report Abuse
jagan இது எதிர் கட்சிகளின் செட்டப்
Rate this:
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
08-ஜன-202018:08:15 IST Report Abuse
Mohamed Ibrahim பணக்கார வீட்டுப் பிள்ளை காரை ஆக்சிடன்ட் பண்ணா அதுக்கு பதில் நான் தான் செய்தேன் என வீட்டு டிரைவர் ஆஜராவபோல் உள்ளது இவர்கள் நாடகம்.. பெரிய தீவிரவாதி ABVP ஐ காப்பாற்ற இந்த கத்துக்குட்டி HRD?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X