ஈராக்கிலிருந்து படைகள் வாபஸ்? ; குழப்பத்தில் அமெரிக்க ராணுவம்

Added : ஜன 07, 2020
Advertisement

வாஷிங்டன் : 'படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, மத்திய கிழக்கு நாடான ஈராக் கூறியுள்ள நிலையில், படைகளை திரும்பப் பெறுவது குறித்து, பல்வேறு கருத்துக்களை அமெரிக்கா கூறிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்காக, பல்வேறு நாடுகளின் கூட்டுப் படை, ஈராக்கில் செயல்பட்டு வந்தது. தீர்மானம்ஈரான் மீதான தாக்குதலை அடுத்து, -'தன் நாட்டில் உள்ள, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, ஈராக் கூறியுள்ளது.

இது தொடர்பாக, அந்த நாட்டின் பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 'ஈராக்கில் விமானப் படை தளம் அமைப்பதற்கு அதிகம் செலவிட்டுள்ளோம். அதை திரும்பி செலுத்த வேண்டும். அல்லது ஈராக் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்' என, டிரம்ப் கூறியிருந்தார்.இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி, வில்லியம் சீலி, ஈராக் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:ஈராக்கில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்களுடைய இறையாண்மையை மதிக்கிறோம். படைகளை ஒருங்கிணைத்து, அதன் பிறகு வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பணிகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடக்க வேண்டும். படைகள் வெளியேறுவதற்கு சற்று கால அவகாசம் தேவை.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.வரைவு கடிதம்ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. ''இந்தக் கடிதம் தவறுதலாக அனுப்பப்பட்டு உள்ளது.

அது ஒரு வரைவு கடிதம் தான். ''அதில் அரசு முத்திரையோ, யாருடைய கையெழுத்தோ இல்லை. இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என, அமெரிக்க முப்படைகளின் தளபதி மார்க் மில்லே கூறியுள்ளார்.அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளதாவது:ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வெளியேறும்படி, ராணுவத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவே, அமெரிக்கா உள்ளிட்ட படைகள் ஈராக்கில் உள்ளன. அது முடியும் வரை, படையை திரும்பப் பெற மாட்டோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், மாறி மாறி கருத்து கூறி வருவதால், ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுகிறதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பார்லி.,யில் மசோதா நிறைவேற்றம்சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவித்து, ஈரான் பார்லி.,யில் மசோதா நிறைவற்றப்பட்டு உள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:சுலைமானியைக் கொன்ற அமெரிக்க படைகள், ராணுவத் தலைமையகமான பென்டகனில் பணியாற்றுவோர், துணை அமைப்புகளில் உள்ளவர்கள், ஏஜன்ட்கள், கமாண்டர்கள், சுலைமானியைக் கொல்ல உத்தரவிட்டர்கள் போன்றோர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ராணுவ, உளவு, நிதி, தொழில்நுட்பம் என, எந்த உதவி அளித்தாலும், அது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயலாகும்.இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளுவில்50 பேர் பலிஅமெரிக்க படைகளால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட, ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியின் உடல், அவருடைய சொந்த ஊரான கெர்மானில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக நடந்த இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது ஒரு இடத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி, 50 பேர் உயிரிழந்தனர்; 213 பேர் காயமடைந்தனர்.ஈராக்கில் இருந்து அவர் உடல் கொண்டு வரப்பட்ட போதும், நேற்று முன்தினம் டெஹ்ரானிலும் நடந்த ஊர்வலங்களிலும், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X