அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜெ., மரண விசாரணை

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : ''ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய விசாரணை, அவரது பெருமையை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே, அந்த விசாரணை ஆணையமே வேண்டாம் என்று சொல்லி விடலாம்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசினார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: ராமச்சந்திரன் - தி.மு.க., : ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிக்கவும், ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, ஒரு ஆணையத்தை அரசு அமைத்தது. அந்த விசாரணை ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது. தடையை நீக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் விசாரணை என்பது, அவரது பெருமையை கெடுக்கும் வகையில் உள்ளது.

எனவே, அந்த விசாரணை ஆணையமே வேண்டாம் என்று சொல்லி விடலாம். இ.பி.எஸ்., - முதல்வர்: ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது, பல்வேறு இடங்களில் நடந்தது. அப்போது நடந்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் விசாரணை நடப்பதால், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சட்ட அமைச்சர் சண்முகம்: விசாரணை கமிஷனுக்கு மூன்று மாதம், நான்கு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் நீதிபதி ராஜேஷ்வரனுக்கு உடல்நிலை பாதித்ததால், ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளார். எனவே, விசாரணை அறிக்கை விரைவில் வந்துவிடும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
08-ஜன-202010:58:10 IST Report Abuse
R. Vidya Sagar தர்ம யுத்தம் தொடங்கியவர் ஏன் அமைதியாக இருக்கிறார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X