பிரிவினைவாதிகள் மாற்றிய ரூ.30 கோடி: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிரிவினைவாதி, சுப்ரீம்கோர்ட், ரூ.30 கோடி,முத்திரை,சி.பி.ஐ.,

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பு, தன் முத்திரையை பதித்து, 30 கோடி ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரும் மனுவை பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொது நலன் வழக்கு:

சதீஷ் பரத்வாஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கை தாக்கல் செய்துள்ளார். 'ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பு, தன் முத்திரையை பதித்து, 30 கோடி ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியில் மாற்றிஉள்ளது. 'இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜராகும், சொலிசிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் யாரும் நீதிமன்ற அறையில் இல்லை.

அதையடுத்து, நேற்று மாலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். 'இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகும். 'இது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும்' என, அமர்வு கூறியுள்ளது.

மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 'காஷ்மீரி கிராபிட்டி' என்ற பிரிவினைவாத அமைப்பு, சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் முத்திரையை பதிவிட்டு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, ஜம்முவில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், 2013ல் மாற்றியுள்ளதாக, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


விசாரணை:

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றுவதற்கு, சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வேண்டு மென்றே தங்களுடைய முத்திரையை பதிவிட்டு, இந்த அமைப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றிஉள்ளது. இதன் உள்நோக்கம் என்ன என்பது உள்ளிட்டவை குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
08-ஜன-202010:59:37 IST Report Abuse
Ramesh Sundram ரூபாய் நோட்டுகளில் பேனாவிலோ அல்லது பென்சிலில் கிறுக்கி இருந்தால் அந்த நோட்டு செல்லாது என்று reserve வங்கிக்கு அறிவிக்க என்ன நாள் நட்சத்திரம் பார்க்கிறார்களா என்ன? இப்பொழுது வரும் புது நாட்டிலும் மக்கள் பேனாவிலும் பென்சிலிலும் கிறுக்க ஆரம்பித்து விட்டார்கள் வங்கி ஊழியர்களே சிலர் பென்சிலில் எழுதுகிறார்கள் என்ன செய்ய 15 நாட்களுக்கு முன்பு திருப்பதி செல்லும் பொழுது ஒரு ஹோட்டலில் பாக்கி வாங்கும் பொழுது புது 50 நோட்டில் பேனாவில் தெலுங்கில் கிறுக்கி இருந்தார்கள் என்ன வென்று ஹோட்டல் கல்லாவில் இருப்பவரிடம் கேட்டேன் அவர் அதில் "ஏசுவின் ரத்தத்திற்கு ஜெ என்று தெலுங்கில் எழுதி இருப்பதாக கூறினார் அதை வாங்க மறுத்து வேறு நோட்டு வாங்கி வந்தேன் அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் அந்த செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் தூர்தர்ஷனில் மட்டும் ஒளிபரப்பினால் உபயோகம் இல்லை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-ஜன-202009:19:17 IST Report Abuse
RajanRajan வரவர நீதிமன்றங்கள் குற்றங்கள் பற்றிய ஆராய்ச்சி கூடமாகி விட்டது. சிறைச்சாலைகள் பொழுது போக்கு கூடமாகிவிட்டது. ஹைதெராபாத் டாக்டர் மருத்துவம் தேவை என ஜாமீன் வாங்கி அவன் வெளி வந்து சிறைச்சாலை மரக்கட்டில் கஞ்சி காய்ச்சினது என எல்லாமே நல்ல ஆரோக்கியம் அளித்திருக்கிறது என அறிக்கை வுடுறான் விட்டு கலாய்க்கிறான். என்னங்கடா நடக்குது நாட்டிலே. என்னிக்கு குற்றங்கள் தவிர்க்கும் வகையில் தண்டனையை அமல் படுத்த ஜுட்ஜ் சாமிங்க பழகிக்குவாங்களோ தெரியல்லே
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-ஜன-202008:20:48 IST Report Abuse
ஆரூர் ரங் 2013 ? பசி தன் முத்திரையை அப்போதே பதித்திருக்கிறார் . முத்திரையால் இப்போ முகத்திரை கிழிகிறது
Rate this:
Anand - chennai,இந்தியா
08-ஜன-202017:12:45 IST Report Abuse
Anandநமது கிராம பழமொழி ஒன்று உண்டு "vattal (சாப்பாட்டு தட்டம்) வைத்தபக்கமெல்லாம் வாய் வைப்பவன்" என கூறுவார்கள். இவனுக்கு மிகவும் பொருந்தும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X