குற்றவாளிகளின் தகவல் பரிமாற்றம் பாக்., பார்லியில் மசோதா நிறைவேற்றம்

Added : ஜன 07, 2020
Advertisement

இஸ்லாமாபாத் : கிரிமினல் குற்றவாளிகளின் தகவல்களை, பிற நாடுகளுடன் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் மசோதா, பாக்., பார்லி.,யில், எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியுதவி ஆகியவற்றை தடுக்கும் பணியில், 'எப்.ஏ.டி.எப்.,' எனப்படும், 'நிதிச் செயல்பாடுகளுக்கான அதிரடிப் படை' ஈடுபட்டு வருகிறது. கடந்த, 1989ல், பிரான்சில் உருவாக்கப்பட்ட, இந்த அமைப்பில், இந்தியா உட்பட, 39 நாடுகள் உறுப்பினராக உள்ளன. கடந்த ஆண்டு, இந்த அமைப்பு, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சொத்து முடக்கம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, பாக்., அரசிடம், 27 கேள்விகளை கேட்டது. கருப்பு பட்டியல்அவற்றில், 22 கேள்விகளுக்கு பாக்., பதில் அளிக்கவில்லை.

அதனால், பாக்., பழுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அத்துடன், '2020, பிப்ரவரிக்குள், எஞ்சிய கேள்விகளுக்கு பதில் தராவிட்டால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்' எனவும் எப்.ஏ.டி.எப்., பாக்.,ஐ எச்சரித்தது. இதையடுத்து, கடந்த மாதம், 22 கேள்விகளுக்கு உரிய பதிலை, எப்.ஏ.டி.எப்., அமைப்பிடம், பாக்., வழங்கியது.இதன் தொடர்ச்சியாக, பிற நாடுகளுடன் குற்றவாளிகளின் இருப்பிடம், வங்கி கணக்கு, உள்ளிட்ட விபரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும், சொத்துக்களை முடக்கவும் வகை செய்யும் மசோதா, பாக்., பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது. 'குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி' எனப்படும் இந்த மசோதா, எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.

''இது, பாக்., மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் மசோதா,'' என, பாக்., மக்கள் கட்சி தலைவர், சையது நவீத் குமர் தெரிவித்துள்ளார். இந்த சட்டம், எந்தவொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், சொந்த மக்களை, பாக்., நாடு கடத்த துணை புரியும் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொருளாதார தடைஎனினும், இந்த சட்டம் இயற்றியதன் மூலம், எப்.ஏ.டி.எப்., கருப்பு பட்டியலில் இடம் பெறுவதை, பாக்., தவிர்த்துள்ளது. தற்போது, இந்த அமைப்பின் கருப்பு பட்டியலில், ஈரான், வடகொரியா ஆகியவை உள்ளன. கருப்பு பட்டியலில் இடம் பெறும் நாடுகள், பொருளாதார தடைக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X