அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (3)
Advertisement
CAA,CAB,NRC,சட்டசபை,விவாதம்

சென்னை: ''குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், சிறுபான்மையின மக்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதிப்பு எதுவும் ஏற்படுவதாக இருந்தால், அதற்கு எதிராக, அ.தி.மு.க., குரல் முதலில் ஒலிக்கும்,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ஜெ.அன்பழகன்: புதுக்கோட்டை மாவட்டத்தில், சிறுபான்மையின அதிகாரியை, அரசு விழாவில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ., மேடையை விட்டு கீழே இறக்கி உள்ளார். சிறுபான்மையினர் என்றாலே, உங்களுக்கு கசக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையன்: சிறுபான்மையின மக்களுக்கு, அ.தி.மு.க., அரசு என்றும் பாதுகாப்பாக உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சிறுபான்மை மக்களுக்கு எதிரான, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது ஏன்?

அமைச்சர் உதயகுமார்: குடியுரிமைத் திருத்தச் சட்டம், இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பா.ஜ.வுடன் கைகோர்த்து, தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, 2003ல், குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஆதரித்து விட்டு, தற்போது எதிர்க்கிறீர்கள். அ.தி.மு.க.,வின், 30 ஆண்டு கால ஆட்சியில், எந்த சிறுபான்மையினருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா; ஆதாரத்துடன் கூற முடியுமா; சிறுபான்மையின மக்களை துாண்டி, பிரிவினை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.

ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக, ஆந்திரா, பீஹார் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா கூறியுள்ள கருத்துக்கு, உங்கள் பதில் என்ன?

அமைச்சர் உதயகுமார்: மத்திய உள்துறை அமைச்சராக, சிதம்பரம் இருந்தபோது, தேசிய குடியுரிமை பதிவேடுக்கு ஆதரவாக பேசியதுடன், அதை காஞ்சிபுரத்தில் அறிமுகப்படுத்தினார். தற்போது, சிறுபான்மையின மக்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது என, மத்திய உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பாதிப்பு என்றால், அ.தி.மு.க., அரசு, முதலில் குரல் கொடுக்கும்.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை. அதில், முஸ்லிம்கள், ஈழத் தமிழர்கள் விடுபட்டதை எதிர்க்கிறோம்; அவர்களையும் சேர்க்க வேண்டும். அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினால், நான் பாராட்டுகிறேன்.

அமைச்சர் உதயகுமார்: சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை பெற்று தந்திருக்கலாமே. அப்போது செய்யாமல், இப்போது, அவர்களுக்கு ஆதரவாக பேசுவதை நம்ப, அவர்களே தயாராக இல்லை. தி.மு.க., ஆட்சியில், இலங்கை அகதிகளுக்கு, எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் தான், இந்திய குடிமகன்களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன.

துரைமுருகன்: இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில், முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்க்க வலியுறுத்தி, தி.மு.க., - எம்.பி., சிவா, ராஜ்யசபாவில் திருத்தம் கொடுத்தார். அதை ஏற்கும்படி, நீங்கள் கூறியிருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டுஇருக்காது. அதை, ஏன் நீங்கள் செய்யவில்லை?

அமைச்சர் உதயகுமார்: சிறுபான்மை மக்களுக்கு, எவ்வித பாதிப்பும் இருக்காது. பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்; இந்தியாவில் உள்ள குடிமகன்கள் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஸ்டாலின்: பா.ஜ., ஆட்சியில், தி.மு.க., இடம் பெற்றிருந்தபோது, இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததாக, அமைச்சர் கூறினார். அப்போது, முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் விடுபடவில்லை. இப்போது தான், அந்த பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

அமைச்சர் உதயகுமார்: நீங்கள் தவறு செய்துவிட்டு, எங்கள் மீது பழிபோடுகிறீர்கள். ஆட்சியில் இருந்தபோது ஆதரித்து விட்டு, தற்போது அதிகாரத்தை பெற எதிர்க்கிறீர்கள். இதை, சிறுபான்மை மக்கள் புரிந்து, உங்களுக்கு பாடம் புகட்டுவர். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202021:01:03 IST Report Abuse
kulandhai Kannan So, DMK supports CAA??
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
08-ஜன-202018:06:05 IST Report Abuse
suresh kumar இஸ்லாமிய நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளில் கூட வேற்று நாடு முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
08-ஜன-202012:05:48 IST Report Abuse
Ramakrishnan Natesan அப்புறம் சொல்லுவார் சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் என்று எனக்கு தெரியாது என்று இந்த நவீன மந்திரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X