எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்த நாள்: 500 மது கடைகள் மூட திட்டம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (9)
Advertisement
jayalalitha,birth_anniversary,Tasmac,birthday,ஜெயலலிதா,பிறந்தநாள்,டாஸ்மாக்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 500 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 மதுக்கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. இந்த கடைகளில், மாதம், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்' என, அப்போதைய அ.தி.மு.க., பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார். மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற அவர், 500 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டதுடன், கடைகள், மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவித்தார்.

ஜெ., மறைவால், 2017ல், முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை, படிப்படியாக மது விலக்கு அறிவிப்பின் கீழ், மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப் படவில்லை.தமிழகத்தில், இதுவரை நடந்துள்ள உள்ளாட்சி தேர்தல்களில், ஆளுங்கட்சி தான், 60 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததை அடுத்து, விரைவில், நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெ.,வின் பிறந்த நாள், அடுத்த மாதம், 24ம் தேதி வருகிறது. இதனால், வாக்காளர்களை கவர, 500 மதுக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.



- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
09-ஜன-202012:40:40 IST Report Abuse
karutthu வரும் ஜனவரி 17 புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பிறந்த நாள் அன்று 500 மதுக்கடைகளை மூடவேண்டும் மது .குடிக்கக்கூடாது என்பதை அவர் படங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் .அவர் வழியில் ஆட்சியை நடத்தும் தமிழக அரசு இதை உடனேயே செய்ய முன்வரவேண்டும் - எம் ஜி ஆர் ரசிகர் .....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜன-202019:24:54 IST Report Abuse
Sampath Kumar மூடிட்டாலும் அப்படியே குடி மகன்கள் மாற போறாங்க போல பேசாம போ
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜன-202016:49:02 IST Report Abuse
Endrum Indian ஜெயலலிதா 500 மூடினார் வேறு வேறு இடங்களில் 2000 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன, அதைப்போலவே செய்யத்தான் இந்த ஏமாற்று திட்டமா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X