பிரதமர் மோடி, -அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்

Added : ஜன 08, 2020
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக கூறினார்.

ஈராக்கில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா - - ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தொலைபேசி உரையாடலில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து, இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால், கட்டமைக்கப்பட்ட இந்திய - அமெரிக்க உறவுகள், நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டே செல்வதாக மோடி கூறினார். கடந்த ஆண்டு, இருநாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும், மோடி எடுத்துரைத்தார்.இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த, டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக, பிரதமர் மோடி, அவரிடம் தெரிவித்தார்.

பின், டிரம்ப், இந்திய மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். கடந்த சில வருடங்களில், இருநாடுகளின் உறவு உச்சத்தை தொட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த டிரம்ப், இருதரப்பு ஒத்துழைப்பை, மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக, மோடியிடம் உறுதியளித்தார்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X