பொது செய்தி

இந்தியா

விண்வெளி வீரர்கள் உணவு பட்டியல் தயார்

Added : ஜன 08, 2020
Advertisement

பெங்களூரு : 'ககன்யான்' திட்டத்தின் கீழ், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அங்கு சாப்பிட வேண்டிய உணவுகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பரில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. அந்த திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு அனுப்ப இருக்கும், வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கும் பணிகளை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அங்கு சாப்பிட வேண்டிய உணவுகள் அடங்கிய பட்டியலை, மத்திய அரசின் கீழ் செயல்படும், உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் தயாரித்துள்ளது.

அந்த பட்டியலில், 'வெஜ், எக் ரோல்'கள், இட்லி, பாசிப் பருப்பு அல்வா, 'வெஜ் புலாவ்' ஆகியவை இடம்பெற்று உள்ளன. இவற்றைத் தவிர, விண்வெளி வீரர்களுக்கு வசதியாக, உணவை சூடுபடுத்தும் சாதனம், தண்ணீர், பழச்சாறுகளை பருக சிறப்பு பாத்திரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில், புவி ஈர்ப்பு விசை இல்லாததால், அங்கு அவர்களால், சாதாரணமாக எதையும் பருக முடியாது. ஆகையால், இத்தகைய பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X