அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை: முதல்வர் விளக்கம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
TamilNadu,CM,EPS,தமிழ்நாடு,முதல்வர்,பழனிசாமி

சென்னை: ''தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், நேர்மையோடு, நடுநிலையோடு செயல்பட்டுள்ளனர். அதனால் தான், 450 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ஜெ.அன்பழகன்: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி, தி.மு.க., நீதிமன்றம் செல்லவில்லை. பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கோரி சென்றோம். நீதிமன்றம் தான் தேர்தலுக்கு தடை விதித்தது. தடையை நீக்க, அரசு முயற்சி செய்யவில்லை. அதன்பின், தேர்தல் அறிவித்தீர்கள். நீதிமன்றம், ஒன்பது மாவட்டங்களில், தேர்தலை நிறுத்த உத்தரவிட்டது. இது, உங்களுக்கு தோல்வி இல்லையா? மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில், 271 இடங்களை பிடித்துள்ளோம். ஒரு வார்டில், 16 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றுள்ளோம்.

அமைச்சர் வேலுமணி: இடஒதுக்கீடு முறையாக செய்யப்பட்டுள்ளதாக, நீதிமன்றமே கூறியது. இதுவரை, இதுபோன்று நேர்மையான தேர்தல் நடந்ததில்லை.எங்கள் கட்சி வேட்பாளர்கள், ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில், தோல்வியை தழுவியுள்ளனர். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு, தேர்தலை நடத்தியுள்ளது.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: தேர்தல் நேர்மையாக நடந்தது என, கூறுவதை ஏற்க முடியாது. எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் எல்லாம், ஓட்டு எண்ணும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

அமைச்சர் தங்கமணி: உங்கள் கட்சியை சேர்ந்த, தர்மபுரி எம்.பி., அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ உள்ளது. நாங்கள் யாரும் செல்லவில்லை. எங்கள் மாவட்டத்தில், ஒரு ஓட்டில், எங்கள் கட்சி வேட்பாளர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தோற்றார். நாங்கள் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டோம்; நீங்களும் கேட்டீர்கள். அங்கு வெற்றி பெற்றது சுயேச்சை. ஆனால், அதிகாரிகள் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு மறுத்து விட்டனர். இதுபோல், பல உதாரணங்களை கூற முடியும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை தி.மு.க., மாவட்ட செயலர், முகவர் அட்டை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று வந்தார். அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டார். ஆளும் கட்சியினர் யாரும் அத்துமீறலில் ஈடுபடவில்லை.

முதல்வர்: உள்ளாட்சி தேர்தலில், எந்த இடத்திலும், எந்த தவறும் நடக்கவில்லை. என் தொகுதியில், நங்கவள்ளி ஒன்றியத்தில், ஒரு வார்டில், 11 ஓட்டு வித்தியாசத்திலும், மற்றொரு ஒன்றியத்தில், 17 ஓட்டு வித்தியாசத்திலும், தோல்வி அடைந்தோம். மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டோம்; அதிகாரிகள் மறுத்து விட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், நேர்மையோடு, நடுநிலையோடு செயல்பட்டுள்ளனர். அதனால் தான், 450 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை பொறுத்தவரை, அ.தி.மு.க., கூட்டணி, 43.73 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணி, எங்களை விட கூடுதலாக, 1.59 சதவீதம் ஓட்டுகளை பெற்று, 45.32 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 40.35 சதவீத ஓட்டுகளையும், அ.தி.மு.க., கூட்டணி, 39.60 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளது. எங்களை விட, 0.75 சதவீத ஓட்டுகளை மட்டுமே, கூடுதலாக பெற்றுள்ளீர்கள். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
08-ஜன-202009:07:02 IST Report Abuse
Rajan சூசை 38 சீட் ஜெயிச்சது, அப்பால இப்போ 55% சீட் ஜெயிச்சது எல்லாம் evm ல கோல் மால் பண்ணி தான், இதுல தப்பே நடக்கலியாம்,
Rate this:
Cancel
08-ஜன-202007:58:15 IST Report Abuse
குரும்பூர் குப்புசாமி உள்ளாட்சி தேர்தலில், எந்த இடத்திலும், எந்த தவறும் நடக்கவில்லை. என்பதை ஏற்க முடியாது ...தவறு நடக்காமல் திமுக இவ்வளவு இடங்கள் ஜெயிக்க வாய்ப்பே இல்லை
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
08-ஜன-202006:35:56 IST Report Abuse
blocked user பயனற்ற குடும்பக்கட்சியான திமுக பட்டி தொட்டிகளில் ஏராளமாக செலவு செய்து வெற்றி பெற்று இருக்கிறது. செலவு செய்தவர்கள் பல மடங்கு வருவாயை எதிர்பார்ப்பார்கள். ஆகவே இணக்கமாக கண்காணித்தல் பலரை சிறையில் தள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X