கேரளாவில் முத்துாட் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் மீது தாக்குதல்

Added : ஜன 08, 2020
Advertisement

கொச்சி : கேரளாவில், முத்துாட் பைனான்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர், ஜார்ஜ் அலெக்சாண்டர் மீது, நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில், அவர் படுகாயமடைந்தார்.

கேரளாவில், முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தின், 43 கிளைகளில் பணியாற்றிய, 160 ஊழியர்கள், கடந்த டிசம்பரில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவு ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஐ.டி.யு., எனப்படும், இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆதரவுடன், அவர்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.இந்நிலையில், முத்துாட் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர், ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்துாட் மீது, நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் சென்ற கார் மீது, நேற்று மர்ம நபர்கள் சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், ஜார்ஜ் அலெக்சாண்டர் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், அவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த தாக்குதலின் பின்னணியில், இந்திய தொழிற்சங்க மையத்தின் குண்டர்கள் உள்ளதாக, முத்துாட் பைனான்ஸ் நிறுவனம் புகார் கூறியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை சி.ஐ.டி.யு., மறுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X