சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொழிற்சங்க ஸ்டிரைக் பிசுபிசுப்பு: சில மாநிலங்களில் பாதிப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (14)
Advertisement

சென்னை: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்த போராட்டம் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதித்தது.







வங்கிகளை தனியார் மயமாக்கவோ இணைக்கவோ கூடாது; வைப்பு தொகைகளுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்; வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட ஐந்து சங்கங்கள் இன்று(ஜன.,8) நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதித்தது






மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் இன்றைய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் பங்கேற்றன. மேலும் அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இந்த சங்கங்கள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.இதில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., மற்றும் கம்யூனிஸ்ட், காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் பங்கேற்றன. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், 50 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.







ரயில் சேவை பாதிப்பு



அதேநேரத்தில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒடிசாவில், தல்சர், புவனேஸ்வர், பத்ராக், கேண்டுஜர்கர் போன்ற இடங்களில் ரியல் சேவை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், கம்யூ., மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை பாதிப்படைந்தது. ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. கோல்கட்டாவில், போராட்டம் நடத்தியவர்கள், பெல்காரியா ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். கூச்பெகாரின் துர்கஞ்ச் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டது. கேரளாவின் பல இடங்களிலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.









Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
08-ஜன-202020:12:46 IST Report Abuse
Rajan அப்போ சூசை ஜனாதிபதி ஆக முடியாதா?? 😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢
Rate this:
Share this comment
Cancel
Karthik - Doha,கத்தார்
08-ஜன-202016:26:57 IST Report Abuse
Karthik வேலை இல்லைன்னு அரசாங்கத்தை குறைகூறுபவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஜன-202015:55:42 IST Report Abuse
sankaseshan இந்த உண்டியல் குலுக்கிகளையும் தேச துரோகியாலயும் சீனாவில் விட்டு விடணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X