சாலையில் சாய்ந்து நிற்கும் மரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா? | Dinamalar

சாலையில் சாய்ந்து நிற்கும் மரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?

Added : ஜன 08, 2020
Share
 சாலையில் சாய்ந்து நிற்கும் மரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?

அடையாறு:எந்நேரமும் விழும் வகையில், ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கும் மரத்தின், வேர் பகுதியை பலப்படுத்தி நேராக நட வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

அடையாறு மண்டலம், 175வது வார்டு, அடையாறு, காமராஜர் அவென்யூ, இரண்டாவது தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில், 20க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள் உள்ளன. இதில், 10 ஆண்டு பழமையான ஒரு மரம், சாலையில் சாய்ந்து நிற்கிறது.

வாகனங்கள் செல்ல, இடையூறாக இருந்த சில கிளைகள் வெட்டப்பட்டன. இருந்தும், பலத்த காற்றடித்தால் விழும் அபாயத்தில் உள்ளது.இந்த, மரத்தின் வேர் பகுதியை பலப்படுத்தி, கிளைகளை வெட்டி, நேராக நட வேண்டும். இதற்கான நடவடிக்கையை, மாநகராட்சி எடுக்க வேண்டும் என, அவர்கள் கூறினர்.

குபேந்திரன்,அடையாறு

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X