பொது செய்தி

தமிழ்நாடு

7 மாதம் செயற்கை சுவாசம் அளித்து சிறுவனை மீட்ட அரசு டாக்டர்கள்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (2)
Advertisement

மதுரை : அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் அளித்து, மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

மதுரை, பசுமலையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது, இரண்டரை வயது மகன், கை, கால் மற்றும் உடலின் அனைத்து தசைகளும் பலம் இழந்த நிலையில், மே மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.டாக்டர்கள் பரிசோதனையில், தசைகளை வலு இழக்கச் செய்யும், 'குல்லியன் பாரி சிண்ட்ரோம்' எனும் நோய், சிறுவனை பாதித்து இருப்பது தெரிந்தது. 'இம்முனோகுளோபுலின், மீத்தைல் பிரட்னிசலோன்' போன்ற விலையுர்ந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதற்கிடையே, நோயால், சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, சிறுவனுக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவாசத் தொற்றுக்கான விலை உயர்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டன. டியூப் மூலம், மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டது. 'பிசியோதெரபி' பயிற்சியும் வழங்கப்பட்டது.இப்படி, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் தொடர்ந்தது. உடல் நலனில் முன்னேற்றம் இருந்ததால், டிசம்பரில் படிப்படியாக செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது.தற்போது, சிறுவனால் தானாக சுவாசிக்க, உணவு உட்கொள்ள, நடக்க முடிகிறது. இரண்டரை வயது சிறுவனுக்கு இத்தனை மாதங்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது மிகவும் அரிதானது.

சிகிச்சை அளித்த பல்வேறு துறைகளின் டாக்டர்களை, டீன் சங்குமணி பாராட்டினார்.ரூ.1.5 கோடி சிகிச்சை இலவசம்அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், நல்ல நிலைக்கு திரும்பி, வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டான். ஏழு மாதங்கள், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது, தென் மாநிலங்களிலேயே இதுதான் முதல் முறை. இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், 1.50 கோடி ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில், சிறுவனுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.சங்குமணி, டீன், மதுரை அரசு மருத்துவமனை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
08-ஜன-202019:42:10 IST Report Abuse
THINAKAREN KARAMANI அரசு மருத்துவமனையில் நோயாளிகளைக் கவனிக்கமாட்டார்கள் - டாக்டர்கள் அலட்சியமாக நடந்துகொள்வார்கள் என்றெல்லாம் மக்கள் புகார் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அபுர்வநோய்த்தாக்கிய ஒரு சிறுவனுக்கு ஏழுமாதங்கள் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளித்தது உயிர் கொடுத்துள்ளார்கள் அந்த மதுரை அரசு மருத்துவக் குழுவினர். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் மருத்துவம் செய்த அந்த மருத்துவக் குழுவினருக்கு என் அன்பு வணக்கங்களையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - Hosur,இந்தியா
08-ஜன-202012:05:12 IST Report Abuse
ravichandran டீன் மற்றும் மருத்துவர்கள் அனைவர்க்கும் paaraattukal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X