டி.எஸ்.பி., தற்கொலை வழக்கு: நாளை உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., தற்கொலை வழக்கு: நாளை உத்தரவு

Added : ஜன 08, 2020

கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட மறு விசாரணை மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, டி.எஸ்.பி., விஷ்ணு பிரியா, பணியில் இருந்தபோது, துாக்கு போட்டு தற்கொலை செய்தார். போலீஸ் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை ரவி புகார் அளித்தார்.இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., 'புகாரில் ஆதாரமில்லை' எனக் கூறி, வழக்கை கை விடுவதாக, தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவியின் வக்கீல் அருள்மொழி மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் உட்பட ஏழு பேரிடம், மறு புலன் விசாரணை நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், மீண்டும் விசாரிக்காமல், பழைய விசாரணை அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இதனால், நீதிமன்றமே தனி புகார் எடுத்து, ஏழு பேரிடம், மறு விசாரணை நடத்தி வருகிறது. விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி, சென்னை கூடுதல் எஸ்.பி., சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., முத்தமிழ் முதல்வன், உதவி கமிஷனர் மகேஸ்வரி, டி,எஸ்.பி., இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா வாக்குமூலம் அளித்தனர். ஏழு பேரிடம்மறு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, உத்தரவுக்காக நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X