சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என் மனைவியை கடத்திட்டாங்க: கணவர் பத்திரமா இருக்கேன் - கவுன்சிலர்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சாக்கோட்டை ஒன்றிய, 10வது வார்டு காங்., கவுன்சிலர் தேவிமீனாளை, தி.மு.க.,வினர் கடத்திச்சென்றதாக, அவரது கணவர் கூறுகிறார். ஆனால், அ.தி.மு.க., தரப்பில் அச்சுறுத்தல் வந்ததால், பத்திரமான இடத்தில் இருப்பதாக, தேவிமீனாள், 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றி யத்தில் உள்ள, 11 வார்டு களில், அ.தி.மு.க., - ஐந்து; தி.மு.க., - மூன்று; காங்., - மூன்று இடங்களை கைப்பற்றின.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், தலைவர் பதவியை பிடிக்க, அ.தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. இதனால் கூட்டணி கவுன்சிலர்களை, பாதுகாப்பான இடத்தில், தி.மு.க., நிர்வாகிகள் வைத்துள்ளனர். இந்நிலையில், காங்., கவுன்சிலர் தேவிமீனாளை, தி.மு.க.,வினர் கடத்தியதாக, அவரது கணவர் மகேந்திரகுமார் கூறுகிறார்.நேற்று, வீட்டில் இருந்து, ஒலி பெருக்கி மூலம், ''என் மனைவியை, தி.மு.க.,வினர் கடத்தி விட்டனர்.

நான் கூட, அவரிடம் பேச முடியவில்லை,'' என்றார். இந்நிலையில், தேவிமீனாள் வெளியிட்டுள்ள வீடியோவில், ''என்னை கடத்தியதாக வதந்தி பரவுகிறது. நானும், மகனும், எங்கள் உறவினர் வீட்டில், பாதுகாப்பாக இருக்கிறோம். அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., தரப்பில் அச்சுறுத்தல் வந்தது. வரவேண்டிய நேரத்தில், வருவேன்,'' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஜன-202009:06:35 IST Report Abuse
Girija ஹும் இப்படி ஒரு குடும்பம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X