எனது ஆட்சியில் வரி வருவாய் இரு மடங்கு உயர்வு: கெஜ்ரிவால் பெருமிதம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (23)
Advertisement
எனது ஆட்சியில் வரி வருவாய் இரு மடங்கு உயர்வு: கெஜ்ரிவால் பெருமிதம்

புதுடில்லி: தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு வரும், பிப்., 8ல் தேர்தல் நடக்க உள்ளது; 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதை, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்ததையடுத்து தலைநகர் டில்லியில் தேர்தல் பிரசாரத்திற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.





தேர்தல் பரபரப்புக்கிடையே நேற்று நடந்த நிகழ்ச்சியில் 5 ஆண்டு காலஆட்சியின் செயல்பாடுகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் ,தனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.அதன் விவரம்:
* முன்னர் அரசு பள்ளிகள் நிலைமை படுமோசமான நிலையில் இருந்தன. பின்னர் எனது ஐந்தாண்டு கால ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப்பள்ளிகள் சிறப்பானதாக இருந்து வருகிறது.கடந்த 70 ஆண்டுகளி்ல் மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பது இது முதன்முறை.
*சுகாதார காப்பீட்டுதிட்டத்தின் கீழ் டில்லியில் 450 சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுளளன. அரசு மருத்துவமனைகள் முற்றிலும் குளிரூட்பட்டு இலவச மருத்துவ சேவையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
* டில்லியை மிரட்டி வந்த டெங்குவை ஒழித்திட மெகா போராட்டமே நடத்தினோம்.
* டில்லியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தண்ணீர் மாபியாக்கள் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டது.

* கடந்த ஐந்தாண்டு கால ஆம் ஆத்மி ஆட்சியில் வரி மூலம் கிடைத்த வருவாய் ரூ. 30 ஆயிரம் கோடியிலிருந்து ,ரூ. 60 ஆயிரம் கோடி என இரு மடங்காக உயர்ந்துள்ளது. இவ்வளவு வரி வருவாயை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. நேர்மையான ஆட்சிக்கு நீங்கள் தந்த அங்கீகாரம் ஆகும். இவை அனைத்தும் உங்களால் தான் சாத்தியம். இவ்வாறு அவர் பட்டியலிட்டு பேசினார்.

**********************

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202013:24:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆட்சியே நடத்தவில்லை, அதனால் தான் வரிவருவாய் உயர்ந்துள்ளது. ஆட்சி நடத்தி இருந்தால் அம்பேல்தான்
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
08-ஜன-202011:22:39 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அசத்துங்க ஜீ படிச்சவன் 1140 கோடி க்கு நீர்மேலாண்மை திட்டம் துவங்குகிறான் பிஜேபி சிலைகளை திறக்க அடிகள் நாட்டுகிறார்கள் மக்கள் சங்கிகளை நம்புகிறார்கள் ஆடு எப்பவுமே கசாப்பு காரனை தான் நம்பும் போல
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
08-ஜன-202011:06:26 IST Report Abuse
Narasimhan வியாதியும் இரண்டு மடங்காகி இருக்கிறதே. அதை பற்றி என்ன கருத்து சார்
Rate this:
Share this comment
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
08-ஜன-202011:49:41 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அது நீங்கள் உள்ள ஊரின் பெட்ரோலினால் இருக்கும் நீங்கள் சொந்த ஊர்க்கு வந்து இயற்கை கட்டுரை சுவாசியுங்கள் நோய் அண்டாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X