ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement

வில்லிவாக்கம்:பெருமாள் கோவில் குளக்கரை தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் பெருமாள் கோவில் குளக்கரை தெரு உள்ளது. இத்தெருவை ஆக்கிரமித்து, 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.மேலும் கடைகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். இதனால், பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X