சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பருவ மழையால் நிரம்பிய வேளச்சேரி ஏரி: கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

Added : ஜன 08, 2020
Advertisement
 பருவ மழையால் நிரம்பிய வேளச்சேரி ஏரி: கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

வேளச்சேரி:சமீபத்தில் பெய்த மழையில், உபரி நீர் வெளியேறும் அளவுக்கு, வேளச்சேரி ஏரி நிரம்பியது. அதே வேளையில், ஐந்து இடங்களில் இருந்து வரும் கழிவு நீரை தடுத்தால், ஆண்டு முழுவதும், தண்ணீர் சுத்தமாக இருக்கும் என, பகுதி மக்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.

சென்னையின் முக்கிய நீர்நிலையான, வேளச்சேரி ஏரி, 265.48 ஏக்கர் பரப்பு கொண்டது. அரசு கையகப்படுத்தியது, ஆக்கிரமிப்பு போக, 55 ஏக்கர் பரப்பளவாக, ஏரி சுருங்கி உள்ளது.


சீரமைப்பு



ஏரியை இரண்டு துண்டாக்கி, நுாறடி சாலை அமைக்கப்பட்டது. ஏரியில், 1,800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.மேலும், ஏரியை துார் வாரி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால், 8 அடி ஆழத்தில் சகதிஉள்ளது.நீர்நிலைகளை சீரமைக்க, பொதுமக்கள் முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, நீர்நிலை ஆர்வலர்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து, ஏரியில் வளர்ந்த புதர்களை அகற்றி சீரமைத்தனர். மாநகராட்சியும், ஆகாய தாமரையை அகற்றியது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில், உபரி நீர் வெளியேறும் அளவுக்கு, ஏரி நிரம்பியது. ஆனால், கக்கன் பாலம், அம்பேத்கர் நகர், நுாறடி சாலை, ராஜ்பவன் கால்வாய் போன்ற பகுதியில் இருந்து வரும் கழிவு நீர், ஏரியில் கலக்கிறது.

மழைநீருடன், கழிவு நீர் கலப்பதால், ஓரிரு மாதத்தில், ஏரிநீர் முழுவதும் மாசடைந்து விடும். இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து, சுற்றி வசிப்போரின் ஆழ்துளை கிணறுகளில், கழிவு நீர் கலந்து வரும் சூழல் ஏற்படும்.


நடவடிக்கை



அதோடு, மர்ம காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற, நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, மழை நீரால், நன்னீராக இருக்கும் ஏரி நீர், அதேபோன்று தொடர, கழிவு நீர் வரும் பாதையை அடைக்க வேண்டும். அதோடு, கழிவு நீர் விடும் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X