கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ 500 லஞ்சம் வாங்கியவருக்குஒரு ஆண்டு சிறை தண்டனை

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement

திருநெல்வேலி : தென்காசி அருகே ரூ 500 லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் வன்னிகோனேந்தலை சேர்ந்த தங்கராஜ், 2014ல் அவரது மனைவி பெயரில் உள்ள நிலத்திற்கு சில ஆவணங்களை கேட்டிருந்தார்.கலெக்டர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக இருந்த முகமதுபசுலுதீன், அவற்றை நகல் எடுத்து தர 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் வாங்கிய அவரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி லஞ்சஒழிப்பு கோர்ட்டில் நடந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, முகமது பசுலுதீனுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202015:09:33 IST Report Abuse
SELF அடப்பாவிகளா 500 ரூபாய் லஞ்சம் வாங்கியவருக்கு சிறையா. நாட்டில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக பெட்டி பெட்டியாக கை மாறுவது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரியாதா. சிஎம்டிஏ வில் என்ன நடக்கிறது. பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனிக்காரர்கள் கோடி கோடியாய் லஞ்சம் கொடுத்து தானே அனுமதி வாங்குகிறார்கள். இது யாருக்குமே தெரியவே தெரியாதா. ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது ஆனால் 500 ரூபாய் லஞ்சமாக பெற்றவரை மறைந்து இருந்து பிடித்து உலக மகா சாதனை படைக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆகையால் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினால் தப்பித்துவிடலாம். இதையெல்லாம் கின்னஸ் புக்கில் போட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X