பரனூர் சுங்கச்சாவடியில் டூ-வீலர் பாதை எங்கே?

Added : ஜன 08, 2020
Advertisement
 பரனூர் சுங்கச்சாவடியில் டூ-வீலர் பாதை எங்கே?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - பரனுார் சுங்கச்சாவடியில், இருசக்கர வாகன பாதை இல்லாததால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை, சுங்க கட்டண சாலையாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகிக்கிறது.இச்சாலையில், செங்கல்பட்டு அடுத்த -பரனுாரில், சுங்கச்சாவடி உள்ளது. இங்கு, சென்னை - திருச்சி இருவழி தடங்களிலும், கனரக வாகனங்களுக்கு மட்டுமே பாதை உள்ளது; இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதையில்லை.

நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் தடத்திலேயே, இருசக்கர வாகனங்களும் செல்கின்றன. இதனால், கட்டணம் செலுத்த வாகனங்கள் நிற்கும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வாகன விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. சிலர், சாலையை ஒட்டியுள்ள கரடு முரடான பாதையில் செல்கின்றனர்.சுங்கச்சாவடிகளில், இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்காமல், நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X