பாலாறு வழக்கில் பதில் மனு தமிழக அரசுக்கு அவகாசம் நீட்டிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

புதுடில்லி : பாலாறு தடுப்பணை வழக்கில், ஆந்திர அரசு தாக்கல் செய்த பதில் மனு மீது, தமிழக அரசு பதில் அளிக்க, இரண்டு வாரம் அவகாசம் அளித்து, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு பல இடங்களில் தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ரூ.50 கோடி செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனால், தமிழகத்தின் நீராதாரம் முற்றிலும் தடைபடும் என்று கூறி, ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாறு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணக் கோரி, தமிழக அரசு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அணை கட்டுவதில் ஆந்திர அரசு உறுதியாக உள்ளது.பாலாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த, தமிழக அரசு தொடுத்த வழக்கு கடந்த ஜூலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விவரங்கள், முக்கிய அம்சங்கள் குறித்து தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர், பாலாறு அணை விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்ஹா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர அரசு தாக்கல் செய்த பதில் மனு மீது, தமிழக அரசு பதில் அளிக்க, இரண்டு வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பதில் அளிக்க, இரண்டு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X