பல நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Added : ஜன 08, 2020
Advertisement
 பல நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கிண்டி:பல நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவு நீரால், தொற்று நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது.அடையாறு மண்டலம், 174வது வார்டு, மடுவாங்கரை, நரசிங்கபுரத்தில், எட்டு தெருக்கள் உள்ளன. பிரதான தெருவில் உள்ள கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், நரசிங்கபுரம், மசூதி காலனி பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 10 நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தியும், சுகாதார பாதிப்பும் அதிகரித்து உள்ளது.இதனால், மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பகுதிமக்கள் கூறியதாவது:நரசிங்கபுரத்தில், நீரோட்டம் பார்த்து குழாய் பதிக்காததால், மோட்டாரால் கழிவு நீரை வெளியேற்றி வந்தனர். தற்போது, மோட்டார் பழுதடைந்து உள்ளது. குழாயில் ஏற்பட்ட மண் அடைப்பை சரிசெய்யவில்லை. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X