ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான புகார் பட்டியல் தர மத்திய அரசுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான புகார் பட்டியல் தர மத்திய அரசுக்கு உத்தரவு

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)

புதுடில்லி : பல்வேறு புகார்களில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் பட்டியலை அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தலைமை தகவல் ஆணைய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த, நூதன் தாக்குர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையத்தைச் சேர்ந்த, தகவல் ஆணையர் திவ்யபிரகாஷ் சின்ஹா, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதுபோல், நாட்டின் உயர் பதவியில் இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் நடவடிக்கைகளும், வெளிப்படையாக இருக்க வேண்டும்.பல்வேறு வழக்குகளில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலை, மனுதாரர் கேட்டுள்ளார்.

அந்தப் பட்டியலை அவருக்கு அளிக்க வேண்டும்.அவர் மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள், மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் என, அனைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறித்தும் கேட்டுள்ளார். முழு விபரங்களும் தரப்பட வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை தரத் தேவையில்லை. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X