இந்திய வம்சாவளி பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Indian_origin,ArchanaRao, DeepaAmbekar,judge,NewYork_City, நீதிபதி,நியமனம்,இந்திய_வம்சாவளி

நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


latest tamil newsதீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது சிவில் நீதிமன்ற நீதிபதியாக, மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், நியூயார்க் நகர்மன்ற குழுவில் மூத்த அரசு வழக்கறிஞராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
08-ஜன-202015:21:05 IST Report Abuse
ponssasi நாம் இப்படிப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களை இடஒதுக்கீடு , ஊழல் , வன்முறை போன்றவற்றால் இழந்தோம். இந்தியாவில் இப்படிப்பட்ட செயல்களால் வெறுத்து ஒதுங்கி வெளிநாடு போனவர்கள் இவர்கள், இன்னும் இருப்பவர்களையும் இழப்பாமல் இருபோம், சென்றவர்களை வாழ்த்துவோம்,
Rate this:
Cancel
08-ஜன-202013:26:23 IST Report Abuse
ஆரூர் ரங் வம்சாவழி என்பதே சரி
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
08-ஜன-202011:55:45 IST Report Abuse
Mayuram Swaminathan இது போன்ற செய்திகள் வரவேற்கத்தக்கவை. இதே அமெரிக்காவில் இந வெரி செயல்களும் நடக்கின்றன. வெரி செயல்களும் இடம் பெறுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X